இது தெரியுமா ? வெறும் வயிற்றில் சிவப்பு ஆப்பிள்களை எடுத்து கொள்வதால்...
ஆப்பிள்கள் ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாக உள்ளன. இவற்றில் கலோரிகள் குறைவு என்றாலும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் 95 கலோரிகள், 25 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதுதவிர வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதிலும், சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கூடுதலாக ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கு உதவும் பொட்டாசியத்தை ஆப்பிள்கள் கொண்டுள்ளன. இதுதவிர சிறிய அளவு வைட்டமின் ஏ மற்றும் பல்வேறு பி வைட்டமின்களையும் வழங்குகின்றன. இப்படி பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை வழங்கும் ஆப்பிள்களைக் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உங்கள் உடலில் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. தினமும் காலை வெறும் வயிற்றில் சிவப்பு ஆப்பிள்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.
- வெறும் வயிற்றில் சிவப்பு ஆப்பிள்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் தனித்துவமான நன்மைகளில் ஒன்று செரிமான ஆரோக்கியம். ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் ஏற்படுவதை இது தடுக்கும். பெக்டின் எனப்படும் சொல்யூபில் ஃபைபர் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது. செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஆதரிக்கிறது. எனவே காலை டயட்டில் சிவப்பு ஆப்பிள்களைச் சேர்ப்பது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும்.
- உடல் எடையை நிர்வகிக்கச் சிவப்பு ஆப்பிள்களை உங்கள் காலை டயட்டில் சேர்ப்பது பெரும் பலனளிக்கும். ஆப்பிளில் காணப்படும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தி நிறைவாக உணர உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. மேலும், ஆப்பிள்களில் கலோரிகள் குறைவு என்பதால் எடையைப் பராமரிக்க அல்லது குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த விருப்பமாக அமைகிறது.
- சிவப்பு ஆப்பிள்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவை கொலஸ்ட்ரால் லெவலை குறைத்து இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆப்பிளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் ஒரு சிவப்பு ஆப்பிளை டயட்டில் சேர்ப்பதன் மூலம், உங்கள் இதய அமைப்பைப் பாதுகாக்க முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
- சிவப்பு ஆப்பிள்கள் நம் சருமத்திற்கும் மிகவும் ஏற்றது. இவற்றில் இருக்கும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது. கொலாஜன் என்பது சருமத்தை எலாஸ்டிக் தன்மையுடன் வைத்திருக்க மற்றும் வயதாகும் அறிகுறிகளைக் குறைக்க உதவும். ஆப்பிள்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், ஃப்ரீ ரேடிக்கல்களினால் ஏற்படும் சரும பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் இளமையாக இருக்கும். டயட்டில் சிவப்பு ஆப்பிளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஆரோக்கியமான, அதிக பொலிவான சருமத்தை பெறலாம்.
- சிவப்பு ஆப்பிள்கள் இயற்கை ஆற்றலின் சிறந்த மூலமாகும். இவற்றில் உள்ள இயற்கை சர்க்கரைகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை சேர்ந்து மெதுவான மற்றும் நிலையான ஆற்றல் வெளியீட்டை வழங்குகிறது. காலை நேரங்களில் சிவப்பு ஆப்பிளைச் சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் நீங்கள் ஈடுபடும் செயல்களில் சிறப்பாகக் கவனம் செலுத்தவும், உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும். காஃபினை சார்ந்திருக்காமல் எனர்ஜி லெவலை உயர்த்த விரும்பும் அனைவருக்கும் இது சரியான தேர்வாக அமைகிறது. ஆயுர்வேதத்தின்படி, தினமும் காலையில் ஒரு மீடியம் சைஸ் சிவப்பு ஆப்பிளை (ஸ்லைஸ் செய்யப்பட்ட) சாப்பிடுவது, உங்கள் தினசரி காலை உணவை ஆரோக்கியமாக வைக்கச் சிறந்த வழியாகும்