மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு: இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம்..!
WEBDUNIA TAMIL January 16, 2025 06:48 PM




மதுரை ஜல்லிக்கட்டில் ஜாதியை பாகுபாடு பார்க்கப்பட்டதாக இயக்குனர் ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நீலம் பண்பாட்டு மையத்தின் எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு!

இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை ,களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள். இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ???

Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.