கணவன் - மனைவி சண்டை.. மகன், மகளை கொன்று தம்பதியினர் தற்கொலை..!
WEBDUNIA TAMIL January 16, 2025 06:48 PM


ஈரோடு மாவட்டத்தில் கணவன் மனைவி சண்டை காரணமாக மகன் மகளை கொன்று அந்த தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தனசேகர் மற்றும் பாலாமணி தம்பதிக்கு வந்தனா என்ற மகளும் மோனிஷ் என்ற மகனும் இருந்து வந்தனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனசேகர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப சண்டை வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே சண்டை தீவிரமடைந்ததை அடுத்து விஷ மாத்திரைகளை எடுத்து, மகன் மற்றும் மகளுக்கு கொடுத்து கொலை செய்தனர். அதன் பின்னர், கணவன் மனைவி இருவரும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், தனசேகரன், பாலாமணி மற்றும் இரண்டு குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தனசேகரன் மற்றும் பாலாமணி ஆகிய இருவரும் முதலில் உயிரிழந்தனர்.

அதன் பிறகு, குழந்தைகள் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அடுத்தடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது.

சாதாரண குடும்பச் சண்டையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.