`` 'பிளாக் பாண்டி' ஜெய்ச்சிடுவான்!" - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சென்னை வீரா பாய்ஸ் டீம்
Vikatan January 16, 2025 06:48 PM

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில், வெவ்வேறு ஊர்களில் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கக்கூடிய காளைகளை கூட்டிவந்து வாடிவாசலில் சீறிப்பாய்ந்து மல்லுக்கட்ட விடுகின்றனர்.

அவ்வகையில் சென்னையில் கொரட்டூரிலிருந்து வந்திருக்கும் "வீரா பாய்ஸ்" குழுவை சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது, "என் பேரு சரண்ராஜ். நாங்க மெரினா போராட்டத்துக்கு அப்புறம் 2017இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்தோம். அதுல ரொம்ப ஈர்க்கப்பட்டு மாடு வளர்க்க ஆரம்பிச்சோம். அது அப்படியே படிப்படியா வளர்ந்து 2023ல அவனியாபுரத்துல ஒரு மாடு அவுத்து விட்டோம். 2024ல 2 மாடு அவுத்தோம். இந்த வருஷம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்'னு இந்த மூணு இடத்துலயுமே அவுத்து விடுறோம். இதுவரை இரண்டு வட்டம் பிரைஸ் அடிச்சி இருக்கு. இந்த தடவை அவுத்து விட்ட எல்லாமே ஜெயிச்சுடுச்சு.

இது மூணாவது மாடு இவன் பேரு 'பிளாக் பாண்டி' கண்டிப்பா இவனும் ஜெய்ச்சிடுவான். கிட்டத்தட்ட போக வர மட்டுமே ஒரு ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம் வரைக்கும் செலவாகும். அதெல்லாம் பார்த்தா இப்படி வந்து நிக்க முடியாது.. செலவையும் தாண்டி இது மேல இருக்கிற ஆர்வம் தான் இப்படி எங்கள வருஷா வருஷம் வரவைக்குது." அப்படின்னு சொல்லிக் கொண்டே வாடி வாசலை நோக்கிய நீண்ட வரிசையில் தன் தம்பியான "பிளாக் பாண்டியை" இழுத்துச் சென்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.