தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வம் என்பவரை எரித்துக் கொன்றதாக ரவுடி பாம் சரவணன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆந்திராவில் வைத்து கைது செய்து ரவுடி பாம் சரவணனை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை எம்கேபி நகர் பகுதிக்கு கொண்டு வந்தனர். அப்போது ரவுடி பாம் சரவணன் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற போது போலீசார் காலில் சுட்டுப்பிடித்தனர். காலில் குண்டு காயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம் சரவணன், வலியோடு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோயம்பேடு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வம் என்பவரை எரித்துக் கொன்றதாக ரவுடி பாம் சரவணன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது நண்பரான வழக்கறிஞர் ராஜேஷ் உடன் சேர்ந்து பன்னீர்செல்வத்தை எரித்து கொலை செய்ததாகவும் பாம் சரவணன் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் பன்னீர்செல்வம் காணாமல்போனதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.