தமிழ்நாட்டில் 4500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசின் முக்கிய வருவாய் பங்கீடாக டாஸ்மாக் தான் இருக்கிறது. குறிப்பாக பண்டிகை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை என்பது அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 450 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது 450 கோடிக்கு மேல் மதுபானம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு முந்தைய தினங்களில் இவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.