சூரிய ஒளியின் பற்றாக்குறை உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா!
Newstm Tamil January 17, 2025 10:48 AM

குளிர்காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள். குளிர்ச்சியைத் தவிர்க்க, நாம் அடிக்கடி நம் வீடுகளைச் சூடாக வைத்துக்கொள்கிறோம், வெளியே செல்வதைத் தவிர்க்கிறோம், ஆனால் இந்தக் காலகட்டத்தில் சூரிய ஒளியிலிருந்து விலகி இருப்பது நம் ஆரோக்கியத்தில் எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், குளிர்காலத்தில் சூரிய ஒளியிலிருந்து விலகி இருந்தால், உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.

குளிர்காலத்தில் சூரிய ஒளியில் இருப்பது குளிர் காற்றிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு மட்டும்மல்லாமல், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆதரிக்கிறது. குளிர்காலத்தில் சூரிய ஒளியிலிருந்து விலகி இருந்தால், உடலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

வைட்டமின் டி-ன் முக்கிய ஆதாரமாகச் சூரிய ஒளி உள்ளது. சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் வைட்டமின் டி ஆனது நமது எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, நமது மன ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வாரம் சூரிய ஒளியிலிருந்து விலகி இருந்தால், உடலில் வைட்டமின் டி அளவு குறையத் தொடங்குகிறது.

இருப்பினும், உடலில் வைட்டமின் டி சேமித்து வைப்பதால் இந்தக் குறைபாடு உடனடியாக உணரப்படுவதில்லை. ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும்.

சோர்வு, தசை வலி, எலும்பு வலி, எரிச்சல், குறைந்த ஆற்றல், லேசான மனநிலை மாற்றங்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியவை இதில் அடங்கும். குறிப்பாக உடலுக்குப் போதுமான அளவு உணவு இல்லை என்றால், இந்த அறிகுறிகள் தோன்றும்.

சூரிய ஒளியிலிருந்து விலகி இருப்பது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளை மோசமாக்கும். குறிப்பாகப் பருவகால பாதிப்புக் கோளாறு (Seasonal Affective Disorder) உள்ளவர்கள் இந்தப் பிரச்சனையை அதிகமாக அனுபவிக்கலாம். சூரிய ஒளியிலிருந்து விலகி இருப்பது மிகவும் கடுமையான தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

அதாவது தூங்குவதில் சிரமம் அல்லது விழித்திருப்பது போன்றவையாகும். சூரிய ஒளியின் பற்றாக்குறை ஆனது சர்க்காடியன் ரிதத்தை சீர்குலைத்து உங்களின் ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தையும் பாதிக்கிறது.

சூரிய ஒளியிலிருந்து விலகி இருப்பதால் எலும்புகள் வலுவிழந்து, நோயெதிர்ப்பு சக்தி பலவீனமடைவதோடு, தசைகளின் செயல்பாட்டையும் பாதிக்கலாம். தவிர SAD இன் அபாயமும் அதிகரிக்கிறது, இது தொடர்ச்சியான மனச்சோர்வு, சோம்பல் மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

சூரிய ஒளி இல்லாததால் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சமாளிப்பது?

ஃபாட்டி ஃபிஷ் (சால்மன், கானாங்கெளுத்தி), ஃபார்டிபைட் ஃபுட்ஸ் (பால், ஆரஞ்சு சாறு அல்லது தானியங்கள்), முட்டையின் மஞ்சள் கருக்கள் மற்றும் மாட்டிறைச்சி கல்லீரல் மற்றும் சீஸ் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி 3 (கோல்கால்சிஃபெரால்) போன்ற கூடுதல் மருந்துகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இயற்கையான சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் ஒரு லைட் தெரபி பாக்ஸ் ஆனது உங்கள் சர்க்காடியன் ரிதத்தைக் கட்டுப்படுத்தவும், SAD அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.

காலை வெயிலில் தினமும் 15-20 நிமிடங்கள் உட்காரவும்:

இயற்கையான சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் ஃபுல்-ஸ்பெக்ட்ரம் பல்புகளைப் பயன்படுத்தி, உங்கள் ரூம் அல்லது வேலை செய்யும் இடம் நன்கு வெளிச்சமாக இருப்பதை உறுதிசெய்யவும்.

தினமும் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்குங்கள்:

உங்கள் மனநிலை மற்றும் சர்க்காடியன் ரிதத்தை பராமரிக்க, தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.