இந்தியா கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்.. செல்வப்பெருந்தகை அழைப்பு!
Dinamaalai January 18, 2025 11:48 PM

இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை தவெக தலைவர் விஜய், வருகிற ஜனவரி 20 ஆம் தேதி சந்திக்க விருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் முதல்முறையாக போராட்டக் களத்திற்கு நேரடியாக செல்லவிருப்பதால், அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'பரந்தூர் ஏகனாபுரம் பகுதி எனது சட்டப்பேரவைத் தொகுதி. நான்  மக்களிடம் பேசியிருக்கிறேன். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லியிருக்கிறேன். மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.

விஜய் தனது கட்சி மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகப் பேசினார். மதவாத சக்தியை, இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான் அவருக்கும் அவரது கொள்கை கோட்பாட்டிற்கும் எல்லோருக்கும் நல்லது' என்று கூறினார்.

!

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.