திமுக சட்டசபை சார்பில் இன்று மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவின் திட்டங்கள் என்பது பெரும்பாலும் நீண்ட கால திட்டமாக இருக்குமே தவிர குறுகிய காலத்திட்டமாக இருக்காது. தற்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்தல் நடத்துவோம் என்று சொல்பவர்கள் பின்பு நாட்டுக்கே ஒரே தேர்தல் தான் என்று கூறி விடுவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக மாற்றவே இந்த ஒரே நாடு திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சி ஒரு தனி மனிதனின் கையில் அதிகாரத்தை கொண்டு போய் சேர்க்கும் என்பதால் இது பாஜக கட்சிக்கு கூட நல்லது கிடையாது என்றார். அதன் பிறகு ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றி விடாதீர்கள். அவர் பேச பேச தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிட கொள்கைகள் என்பது மக்களிடம் கொண்டு போய் சேருகிறது என்று கூறினார்.