சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது, விஜய் அவரது மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்று கூறினார். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்து விடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்றால் விஜய் இந்திய கூட்டணிக்கு வர வேண்டும்.
இதை நான் நாட்டின் குடிமகனாக சொல்கின்றேன் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக கட்சியின் செயலாளரான வெங்கட்ராமன் கூறியதாவது, கூட்டணி குறித்த முடிவை தவெக தலைவர் விஜய் தான் எடுக்க வேண்டும் என்றும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.