உங்கள் உதடுகள் கருப்பு நிறமா இருக்கா..? இதை செய்யுங்க போதும்..!
Newstm Tamil January 20, 2025 10:48 AM

குளிர்ந்த கால நிலை உதடுகளை வறட்சியாக வைத்திருக்க செய்யும். போதுமான அளவு நீரேற்றமாக இருப்பது உதடுகளின் நிறமாற்றத்தை தடுக்க செய்யும். உடலில் போதுமான நீரேற்றமின்மை இருக்கும் போது முதலில் வெளிப்படும் இடம் உதடுகளாக இருக்கலாம். அதனால் குளிர்ந்த மாதங்களில் தாகம் எடுக்கும் வரை இல்லாமல் அவ்வபோது தண்ணீர் குடிப்பது நல்லது. சுவையான புத்துணர்ச்சியூட்டும் பானங்களாக மாற்ற தண்ணீரில் வெள்ளரி அல்லது எலுமிச்சை துண்டுகளை சேர்த்து அவ்வபோது குடித்து வருவது உதடு நிறத்தை பாதுகாக்க உதவும். நீரேற்றமாக இருந்தால் உதடுகளில் பளபளப்பு பார்க்க முடியும்.

எலுமிச்சை இயற்கையான ப்ளீச்சிங் தன்மை கொண்டது. இது கருமையான உதடுகளை ஒளிர செய்கிறது. எனினும் உதடுகள் வறண்டு, வெட்டு காயங்கள் இருந்தால் இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதன் அமிலத்தன்மை சருமத்தை பாதிக்க செய்யலாம். இது இறந்த செல்களை வெளியேற்ற உதவும் என்பதால் நீண்ட நேரம் வைக்க வேண்டாம். நேரடியாக எலுமிச்சையை உதடுகளில் பயன்படுத்த வேண்டாம். எலுமிச்சையை நீர்த்து தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். அல்லது கிளிசருடன் கலந்து உதட்டில் தடவி சுத்தம் செய்தால் கருமை நிறம் மறையும். அதே நேரம் எலுமிச்சை உதடுகளில் எரிச்சலை உண்டு செய்தால் தவிர்ப்பதே நல்லது.

பாதாம் எண்ணெய் உதட்டில் மசாஜ் செய்வது உதட்டை ஈரமாக்கும். உதடுகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்கிறது. மசாஜ் செய்வதன் மூலம் வறட்சி நீங்குகிறது. பாதாம் எண்ணெய் போன்று தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம். நாள் ஒன்றுக்கு நேரம் கிடைக்கு போதெல்லாம் இதை பயன்படுத்தி உதடை மென்மையாக மசாஜ் செய்யலாம். அதே போன்று ஆலிவ் எண்ணெய் உதடுகளில் பயன்படுத்தும் போது இளஞ்சிவப்பு நிற உதடுகள் மென்மையாக பெறலாம். இது வெடிப்பை தடுத்து உதடுகள் வறண்டு போவதை தடுக்கிறது. உதடுகளுக்கு எண்ணெய் பளபளப்பான தோற்றத்தை தருகிறது.

தோல் பிக்மெண்டேஷனுக்கு மாதுளை சாறு சிறந்த ஒன்று. இது இயற்கையாகவே கருமையான உதடுகளை ஒளிர செய்யும். ஒரு டீஸ்பூன் மாதுளை சாறு 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து உதடுகளில் தடவி விடவும். 5 நிமிடங்கள் வைத்திருந்து உதட்டை சுத்தம் செய்யவும். நாள் முழுவதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்து வரவும். உதடுகளில் கருமை நீங்கி கலராக மாறுவதை பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உதடுகளில் பயன்படுத்துவது உதடுகள் கருமையை போக்கும். 4 ஸ்ட்ராபெர்ரி பழங்களை நசுக்கி உதடுகளின் மீது தடவி வரவும். அவை உலரும் வரை வைத்திருந்து பிறகு உதடுகளை சுத்தம் செய்யவும். இதே போன்று நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை வரை செய்து வரவும். இது உதடு கருமையை படிப்படியாக குறைக்க செய்யும். உதடுகளுக்கு இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கும்.

கற்றாழை சருமப்பராமரிப்பில் முக்கியமானது. அதே போன்று உதடு கருமையை போக்குவதிலும் இவை சிறப்பாக விளங்குகிறது. கற்றாழை ஜெல் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி தினமும் உதடுகளில் மென்மையாக மசாஜ் செய்யலாம். இது வறட்சி, காயங்கள், கடினமான உதடு, உதடு சுற்றி கருமை திட்டு போன்றவற்றை அகற்ற செய்யும். கற்றாழை தரமானதாக இருக்கட்டும்.

உதடுகளில் கருமை என்பது குளிர்காலங்களில் தற்காலிகமானது, குளிர்காலம் தொடங்கும் போதே உதடுகள் பராமரிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் குறிப்பாக உதடுகளை ஸ்க்ரப் செய்வது, லிப் பாம் பயன்படுத்துவது, லிப் மாஸ்க் போடுவது என சரியாக செய்யும் போது உதடுகள் வறட்சி மற்றும் கருமை நிறம் ஏற்படாமல் பார்த்துகொள்ளலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.