இடுப்பு பகுதி தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி... ரிசல்ட் உடனே தெரியும்!
Dinamaalai January 21, 2025 11:48 AM

ஆயிரக்கணக்கில் செலவு செய்து மணிக்கணக்கில் ஜிம்மில்   மாங்கு மாங்குன்னு பயிற்சிகள் செய்தாலும் இடுப்பு மடிப்புகளில் உருவான கொழுப்பை கரைக்க முடியாமல்  பலர் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆண்களை விட பெண்களுக்கு தொப்பை இருப்பதால் உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.  குறிப்பாக அதிக மன அழுத்தம், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பெற்ற பின்னதாக மற்றும் வாழ்க்கை முறையில் புதிய புதிய விஷயங்களைப் பின்பற்றுதல் போன்ற பல காரணங்களால் குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் பெண்கள் தொப்பை பிரச்சனையால் அவதிப்பட நேரிடுகிறது. இதை சரி செய்ய வேண்டும் எனில்  தினமும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

பெண்களுக்கு இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பைக் குறைப்பதற்கு வீட்டிலேயே சிம்பிளாக சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக கைகளை மடக்கி இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பக்கவாட்டில் கைகளை மேலே உயர்த்தி, மீண்டும் கீழே இறக்க வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது உடலும் கைகளும் அசையவே கூடாது. தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு மேலாக இந்த பயிற்சிகளை செய்யும் போது தொப்பை குறைய வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள்.


அதே போல் உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் கொழுப்புகளைக் கரைப்பதற்கு குறைந்தது 30 நிமிடங்கள்  ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற கார்டியோ அதாவது ஏரோபிக் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

அடிவயிற்றுத் தொப்பையை வேகமாக குறைக்க வேண்டும் எனில்  க்ரஞ்சஸ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கைகளை மேலே தூக்கிய படி, முட்டியை மடக்கி மெதுவாகக் குனிந்து நிற்கவும். தொடக்கத்தில் இந்த பயிற்சிகள் செய்வது சிரமமாக இருக்கும். தொடர்ச்சியாக செய்யும் போது உடல் எடை சீக்கிரமே குறையக்கூடும்.

எவ்வித உடல் அசதியும் இல்லாமல், மகிழ்ச்சியோடு உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், ஷூம்பா எனப்படும் நடன பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தினமும் தொடர்ச்சியாக 30 நிமிடங்களாவது நடனப் பயிற்சியை மேற்கொள்ளும் போது இதயத்தை பலப்படுத்துகிறது.

உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளையும் குறைக்க உதவுகிறது. இந்த பயிற்சியைத் தொடர்ச்சியாக செய்து வரும் போது 9.5 கலோரிகள் வரை உடல் எடையைக் குறைக்க முடியும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.  உங்களின் உடல் எடையும், தொப்பையையும் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த  பயிற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.