பொதுவாக நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு அதிகரிக்கவும் பப்பாளி பயன்படுகிறது.இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.கண் சம்மந்தமான அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்ககூடியது பப்பாளி.
2.அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.
3.பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால், வலியும், விஷமும் இறங்கும் என்பது உறுதி.
4.பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், பால் நன்றாக சுரக்கும்.
5.பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
6.பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.
7.பப்பாளிப் பழத்தை தேனில் தேய்த்து உண்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.