கொள்ளுவை ஊற வைத்தோ அல்லது ரசம் வைத்தோ சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News January 21, 2025 11:48 AM

பொதுவாக கொள்ளுவை ரசமாகவோ ,சுண்டலாகவோ ,அல்லது பொரியலாகவோ ,குழம்பு மற்றும் சூப்பு செய்து சாப்பிட்டு பலன் பெறலாம் .இதன் ஆற்றல் தெரிந்துதான் நம் முன்னோர்கள் இதை குதிரைக்கு உணவாக கொடுத்தனர் .இதனால்தான் குதிரை கொழுப்பு கூடாமல் சிக்கென்று இருக்கிறது .ஆயுர்வேதத்தில் இதன் பலன்கள் பற்றி நாம் பார்க்கலாம்

1.பொதுவாக கொள்ளுவை ஊற வைத்தோ அல்லது ரசம் வைத்தோ , அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மையால் ஏற்பட்டிருக்கும் ஊளைச் சதையை குறைக்கும்.

2. பொதுவாக ஒருவரின் வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையும் ஒரு காரணம்.
3.அதில் நிறைய கெடுதல்கள் உள்ளன .எனவே நாம் உண்ணும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேனை சேர்த்துக்கொண்டால் கொள்ளுவை போலவே அது தொப்பையை குறைப்பதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

4. அடுத்து கொள்ளுவை போலவே தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், தயிரில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்

5. சிலருக்கு வயது கூட கூட வயிற்றைச் சுற்றி சதை போடும் .இப்படியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது நல்லது,
6.அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயமாக சில நாட்களில் பெருத்த தொப்பை சிறுத்து இருக்கும் இடம் தெரியாமல் மறைய வாய்ப்புண்டு .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.