சிசேரியன் செய்த பெண்களுக்கு சில ஆலோசனைகள்
Top Tamil News January 21, 2025 12:48 PM

பொதுவாக சிலருக்கு அவர்களின் உடல்நிலையை காரணம் சொல்லி டாக்டர்கள் சிசேரியனை பரிந்துரை செய்கின்றனர்
மேலும் சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

1.சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறைந்தது இரண்டு மாதங்களுக்காவது ஒய்வு எடுக்க வேண்டும்

2..குனிந்து நிமிர்ந்து எந்த வேலையும் செய்ய கூடாது .


3.மேலும் அதிக எடையுள்ள பொருளை தூக்க கூடாது .இல்லயென்றால் தையலில் பாதிப்பு ஏற்படும் .4.பிரசவத்திற்கு பிறகு சில பெண்கள் தங்களின் அழகில் அக்கறை எடுத்து கொள்வதில்லை .அப்படி இருக்க கூடாது

5.சிலர் தங்களின் ஆரோக்கியத்தில் கூட அக்கறையில்லாமல் இருப்பர் .ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதனால், எடை அதிகரிப்பு ஏற்படும்.
6.இதனைத் தடுக்க, சிசேரியனுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனையுடன் அடிவயிற்றுப் பகுதி தசைகளுக்கான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
7.சிசேரியன்செய்த பிறகு மூன்று மாதங்களுக்கு தாம்பத்யம் வைத்து கொள்ள கூடாது .மேலும் அந்த காயங்கள் ஆற  சில மாதங்கள் எடுக்கும் .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.