சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டமை தொடர்பில், சுரேஷ் ரெய்னா கருத்து..!
Seithipunal Tamil January 21, 2025 12:48 PM

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வரவேற்பு தெரிவித்துள்ளார். 

கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் சுப்மன் கில் சரியாக செயல்படவில்லை. இந்நிலையில் அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட் அணியில் அடுத்த கேப்டன் ஆவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரெய்னா, கில் தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கில் போன்ற இளம் வீரருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுக்கும் போது அவர் எவ்வளவு திறமை வாய்ந்த வீரராக இருப்பார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். கில் தான் அடுத்த கேப்டன் என்று ரோகித் சர்மாவுக்கு ஏற்கனவே தெரியும். ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு கில் கேப்டனாக செயல்பட்ட போது அவர் எவ்வளவு அருமையான கேப்டன் என்று நாம் அனைவருக்குமே புரிந்து இருக்கும்.

கடந்த 12, 16 மாதங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் செயல்பட்ட விதத்திற்கு கிடைத்த சரியான விஷயமாக நான் இதை கருதுகிறேன். இதனால் தான் ரோகித் சர்மா கில்லை தொடக்க வீரராக பயன்படுத்தி இருக்கிறார். கில்லை துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது தேர்வு குழு மற்றும் ரோகித் சர்மா எடுத்த சிறப்பான முடிவாக நினைக்கின்றேன்.

விராட் கோலியை போல் கில்லும் செயல்படுகிறார் என்பதை பார்த்து தான் ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்திருப்பார். ஒரு போட்டிக்கு தயாராக கில் அபாரமான பணியை காலத்தில் செய்வார் கில்லுக்கு தன்னுடைய அணியை பற்றி நன்றாக தெரியும். கில் அனிக்காக முன் நின்று வழிநடத்துவார். கிரிக்கெட் தொடர்பான அனைத்து விழிப்புணர்வும் அவருக்கு தெரியும்.

எனவே இது ஒரு சிறந்த முடிவாக நான் கருதுகிறேன். இது போன்று பும்ராவும், ஆர்ஸ்தீப் சிங் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு மிகவும் முக்கியமான பௌலர்களாக இருக்கிறார்கள். இதேபோன்று ஹர்திக் பாண்டியா பங்களிப்பு அணியின் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதுபோன்று குல்தீப் யாதவ் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இடம் பெறுவார்.

அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என்பது குறித்து ரோகித் சர்மா முடிவு எடுக்க வேண்டும். இதேபோன்று ஹர்திக் பாண்டியாவும் அக்ஸர் பட்லேலும் இருந்தால் இந்திய அணியின் பேட்டிங் பலம் அதிகரிக்கும். இது நமக்கு நல்ல விஷயம் என்று ரெய்னா கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.