ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 05ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் சமீபத்தில் முடிவடைந்தது.
திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. எதிர்பார்க்கப்பட்ட முக்கிய எதிர்கட்சிகளான பாஜக, அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
திமுக சார்பில் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான தேதி முடிவடைந்த நிலையில் 08 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுவதாக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 05ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று, பிப்ரவரி 08ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.