பொதுவாக சளி தொல்லைக்கு சிறந்த மருந்தாக நம் முன்னோர்கள் சொன்னது மிளகைத்தான் .இந்த மிளகை நாம் சமையலில் பயன் படுத்தும்போது அதை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும் .அதனால் இப்பதிவில் சளியை எவ்வழியில் குறைக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1. சளி இருந்தால் சில மிளகை தேனுடன் சேர்த்து கொடுத்தல் நலம் .ஆனாலும் அந்த சளி தொல்லை வந்த பின் அவஸ்த்தை படுவதை விட அது வரும் முன் இந்த குளிர்காலத்தில் காக்கலாம் .
2. சில மாதம் நீர் காய் கறிகளை தவிர்க்கலாம் ,உதாரணமாக சுரைக்காய் ,பூசணி காய் போன்றவை கபத்தை உண்டு பண்ணும் .
3.மேலும் தயிர் இனிப்பு .பால் சாப்பிடுவதை விட மோர் சாப்பிடலாம் .மேலும் பாசி பருப்பு குளிர்ச்சி என்பதால் அதை சிலகாலம் ஒதுக்கி வைக்கலாம் .
4.இது போல வீட்டிலேயே தயாரிக்க ஒரு தேநீர் பற்றி கூருகிறோம் படியுங்கள்
5.முதலில் துளசி, புதினா இரண்டையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
6.பின்பு இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
7.நன்கு சாறு இறங்கியதும் வடிகட்டி தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி கலந்து பருகலாம்.