பட்ஜெட் தாக்கலுக்கு பின் பவுனுக்கு ரூ.62,000-க்கு மேல் விற்பனை ஆகி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை, இன்று கிராமுக்கு ரூ.85, பவுனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.
இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.7,705.
இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.61,640.
வெள்ளி விலை எதுவும் மாறாமல் ரூ.107 ஆகவே தொடர்கிறது.
ஒரு கிராம் தங்கம் தங்கம் விலை தொடர்ந்து குறையுமா?!தங்கம் விலை இப்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருவதால், அதைக் குறைப்பதற்கான அம்சங்கள் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்ட பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதனால், அன்று தங்கம் விலை காலையில் விற்பனையான விலையில் இருந்து மதியம் கிட்டதட்ட பவுனுக்கு ரூ.2,000 குறைந்தது.
இந்தப் பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி 6 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பது தங்க நகை வியாபாரிகளின் கோரிக்கையாக இருந்தது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அதனால், அதை முன்னிட்டு தங்கம் விலை குறையவில்லை, ஏறத்தான் செய்தது.
இனியும் குறையுமா?!தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. ஆனால், இதே நிலைமை நீடிக்கும்...தொடர்ந்து குறையும் என்று கூறமுடியாது. மேலும், சர்வதேச சந்தை படி பார்த்தாலும், தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை. அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் வரி விஷயங்களில் தொடர்ந்து கிடுக்குபிடி போட்டு வருவதால், இப்போதைக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லை என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.