#featured_image %name%
இந்தியா இங்கிலாந்து ஐந்தாவது டி-20 ஆட்டம்- மும்பை-2 பிப்ரவரி 2025
அபிஷேக் ஷர்மாவிடம் இங்கிலாந்து அணி தோற்றதுமுனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (20 ஓவர்களில் 247/9, அபிஷேக் ஷர்மா 135, ஷிவம் துபே 30, திலக் வர்மா 24, சஞ்சு சாம்சன் 16, அக்சர் படேல் 15, ப்ரைடன் கார்ஸ் 3/38, மார்க் வுட் 2/32, ஆர்ச்சர், ஓவர்டன், அதில் ரஷீத் தலா 1 விக்கட்) இங்கிலாந்து அணியை (10.3 ஓவர்களில் 97, பில் சால்ட் 55, பெதல் 10, ஷமி 3/25, வருண் சக்ரவர்த்தி 2/25, ஷிவம் துபே 2/11, அபிஷெக் ஷர்மா 2/3, ரவி பிஷ்னோய் 1/9) 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் இந்திய அணியை மட்டையாடப் பணித்தார். இன்றைய ஆட்டத்தில் அர்ஷதீப் சிங்கிற்குப் பதிலாக முகமது ஷமி ஆடினார்.
இந்திய அணியின் தொடக்கத்தில் இருந்தது. இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் சஞ்சு சாம்சன் (16 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பிறகு விக்கட்டின் ஒருபுறம் விக்கட்டுகள் சம இடைவெளியில் விழுந்துகொண்டிருந்தபொதிலும் அபிஷேக ஷர்மா (54 பந்துகளில் 135 ரன், 7 ஃபோர் 13 சிக்சர்) அதிரடியாக ஆடினார். திலக் வர்மா (15 பந்துகளில் 24ரன்) சூர்யகுமார் யாதவ் (2 ரன்) ஷிவம் துபே (13 பந்துகளில் 30 ரன்), ஹார்திக் பாண்ட்யா (6 பந்துகளில் 9 ரன், 1 சிக்சர்) ரிங்கு சிங் (6 பந்துகளில் 9 ரன், 1 ஃபோர்) ஆகியோர் அபிஷேக ஷர்மாவிற்கு மபனி கொடுத்தனர். இந்திய அணியை 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 247 ரன் எடுத்தது.
அதன் பின்னர் ஆட வந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (23 பந்துகளில் 55 ரன்) மற்றும் ஜேகப் பெதல் (7 பந்துகளில் 10 ரன்) ஆகிய் ஐருவர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். இந்த சமயத்தில் பந்து வீச வந்த இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கட்டுகளயும் ரவி பிஷ்னோய் ஒருவிக்கட்டையும் எடுத்தனர். மீதமுள்ள மூன்று விக்கட்டுகளையும் முகம்மது ஷமி எடுத்தார்.10.3 ஓவருக்குள் இங்கிலாந்து அணி 97 ரன் களுக்கு அனைத்துவிக்கட்டுகளையும் இழந்து மிக மோசமான தோல்வியைத் தழுவியது.
ஆட்ட நாயகனாக அபிஷேக் ஷர்மா அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 4-1 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை வென்றுள்ளது.
அடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலாவது ஆட்டம் நாக்பூரில் வருகின்ற 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
சாதித்த அபிஷேக் சர்மாதொடக்க வீரரான அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவர், 37 பந்துகளில் 5 பவுண்டரி, 10 சிக்சருடன் 100 ரன்களைக் கடந்தார்.
இதன்மூலம் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரரானார். முன்னதாக ரோகித் சர்மா தலா 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அபிஷேக் சர்மா, 54 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்சருடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார். இதற்கு முன்பு சுப்மன் கில் 126 ரன்கள் (நாட் அவுட்) எடுத்ததே சாதனையாக இருந்தது.
அதேபோல் சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 13 சிக்சர்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் தலா 10 சிக்சர்களுடன் உள்ளனர்.
News First Appeared in