பெங்களூரில் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1.61 லட்சம் அபராதம் - பரபரப்பு தகவல்
Webdunia Tamil February 04, 2025 07:48 PM


பெங்களூரில் உள்ள ஒரு இருசக்கர வாகனத்திற்கு ரூ.1.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரில், சாலை விதிகளை மீறினால், சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து, காவல்துறையினர் அபராத தொகையை விதித்து வருகின்றனர். இந்த அபராத தொகை குறித்த தகவல், அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

இந்த நிலையில், பெங்களூரில் பலமுறை சாலை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இருசக்கர வாகன ஓட்டிக்கு மொத்தமாக 311 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல், அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மொத்தம் 311 முறை சாலை விதிகளை மீறியதாகவும், அதன் மொத்த அபராத தொகை ரூ.1.61 ஆக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வாகனத்தின் மதிப்பு, மொத்தமாக ரூ.50,000 மட்டுமே இருப்பதால், காவல்துறையினர் அதை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், வாகன ஓட்டியவர் மற்றும் வாகன உரிமையாளர் வேறு வேறு நபர்கள் என்பதால், இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமை, சிக்னல் மீறல் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விதிமீறல்களுக்கு இந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.