மீண்டும் காதலில் விழுந்த சமந்தா?!.. வெளியான புகைப்படம்… விரைவில் திருமணமா?
CineReporters Tamil February 04, 2025 07:48 PM

Samantha: நடிகை சமந்தா தன்னுடைய முதல் திருமணத்தை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் தற்போது இரண்டாவது வாழ்க்கையில் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் தமிழில் பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் சமந்தா. தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிய தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

தொடர்ச்சியாக தமிழை தாண்டி தெலுங்கிலும் பிஸி நடிகையாக வலம் வந்தார். அந்த நேரத்தில் தெலுங்கில் மாஸ் நடிகராக இருந்த நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து இரு மத முறைப்படி பிரம்மாண்டமாக கல்யாணம் செய்துக் கொண்டார்.

நான்கு ஆண்டுகளாக இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் அவர் நடிக்க செல்ல குடும்பத்தில் பிரளயம் வெடித்தது. அதுமட்டுமல்லாமல் முன்பை விட அதிகமாக கிளாமராக புஷ்பா படத்தில் அவர் போட்ட ஒற்றை டான்ஸும் பிரச்னைக்கு வழி வகுத்தது.

இன்னொரு புறம் திருமணத்துக்கு முன்னரே நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் கள்ள உறவு இருந்ததாகவும் அதை தொடர்ந்தே சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார் என்றும் கூறப்படுகிறது. இருவரும் பிரிந்த பின்னர் சமந்தாவிற்கு மியோசிட்டஸ் என்ற நோய் தாக்கியது.

நாக சைதன்யா சமீபத்தில் சோபிதாவை இரண்டாவதாக திருமணம் செய்து விட்டு அடுத்த வாழ்க்கையை தொடங்கி விட்டார். நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது உடல் தேறி படங்களில் மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார். சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் சீரிஸில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில், சமந்தா தற்போது ஸ்போர்ட்ஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். வேர்ல்ட் பிக்கில்பால் லீக்கில் சென்னை சூப்பர் சாம்ப்ஸ் அணியை வாங்கி இருக்கிறார். அந்த போட்டிகளில் கலந்துக்கொண்டும் சமந்தா உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தற்போது சமந்தா அடிக்கடி சிட்டாடல் தொடரின் இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் வெளியில் தலைக்காட்டுகிறார். அதிலும், இருவரும் கைக்கோர்த்தப்படி காணப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் காதலிக்கிறார்களா எனக் கேள்வி எழுந்தாலும் இருவரும் இதுகுறித்து எந்த பதிலும் சொல்லவில்லை மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.