`உப்புமாவுக்கு பதில் பிரியாணி தரணும்'- சிறுவனின் கோரிக்கையும் கேரள அரசின் பதிலும்
Vikatan February 04, 2025 07:48 PM
அங்கன்வாடியில் உப்புமாவிற்கு பதில் பிரியாணியும் சிக்கனும் வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதை கேரளா அரசு பரிசீலனை செய்வதாகத் தெரிவித்திருக்கிறது.

கேரளாவில் அங்கன்வாடியில் படிக்கும் ஷங்கு என்ற  சிறுவன் உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணியும், பொரித்த கோழியும் வேண்டும் என்று தனது அம்மாவிடம் கூறிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தை கோரிக்கை வைக்கும் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் குழந்தை அப்பாவித்தனமாக கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஷங்கு

அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தின் கீழ், அங்கன்வாடிகள் மூலம் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் ஒருங்கிணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன” என்று கூறியிருக்கிறார். மேலும் வீடியோ வைரலான நிலையில் பலரும் அவருக்கு சிக்கனும், வறுத்த கோலியும் வாங்கித் தருவதாகத் அந்த சிறுவனின் தாய் தெரிவித்திருக்கிறார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.