மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தலைநகரான துஷான்பேயில் உள்ள சிறையில் சில கைதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள வழிவகுத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சில கைதிகள் தப்பிக்க முயன்றனர்.
சிறைக் காவலர்கள் அவர்களைத் தடுத்தபோது, கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களைத் தாக்கினர். தாக்குதலில் மூன்று காவலர்கள் படுகாயமடைந்தனர். சக காவலர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதிகள் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து கைதிகள் உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட அனைத்து கைதிகளும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள். இந்த அமைப்பு தஜிகிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.