சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 04 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்..!
Seithipunal Tamil February 08, 2025 01:48 PM

சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெட்டி விபத்தில் 04 பெண்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்காள மாநிலம் நதியா மாவட்டம் ரதலா பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட இந்த ஆலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் 05 பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் குறித்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலை தரைமட்டமாகியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பட்டாசு ஆலையில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் இறங்கிய போலீசார் வெடிவிபத்தில் உயிரிழந்த 04 பெண்களை மீட்டுள்ளனர். படுகாயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்திற்கு தலா ரூ. 02 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.