டெல்லியில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது எக்ஸ் வலை பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னதாக நான் உபர் டக்ஸியை புக் செய்திருந்தேன். அதன் பின் சில நாட்கள் கழித்து அந்த ஓட்டுநர் எனக்கு வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்பி துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். அவர் அந்த ஓட்டுநருடன் தனக்கு இருந்த உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் உடன் பகிர்ந்துள்ளார். அதில் அந்த ஓட்டுநர் என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேட்கிறார்.
அதன் பின் நீங்கள் பயன்படுத்திய வாசனை திரவியம் என்ன என்பதை பற்றியும் கேட்டுள்ளார். இதற்கு அந்தப் பெண் திட்டி பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில் உங்கள் தனியுரிமை அமைப்புகள் எவ்வளவு மோசமாக உள்ளன. ஒரு உபர் ஓட்டுநர் எனக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி பயங்கரமான கேள்விகளை கேட்கிறார். பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று உபர் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினார். இது தொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.