மீனாட்சியம்மன் கோயில் அருகே இறைச்சி வெட்டப்படுவதாக வெளியான வீடியோ தொடர்பாக உளவுத்துறையும், காவல்துறையும் விசாரணை நடத்தினர்.
இதில், சாமியார் சமயகருப்பன், சங்கிலி கருப்பனை வைத்து அருள்வாக்கு சொல்லும் நபர் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் விசாரணையில் சமயகருப்பன் கொடுத்த வாக்குமூலத்தில், “நான் மறைமுகமாக ஆடுகளை பலி கொடுக்காதது தவறுதான்.
ஆனால் இதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. பக்தர்களின் மனதை புண்படுத்தியிருந்தால், இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என சாமியார் சமயகருப்பன் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேகொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.