மும்மொழிக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், "ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் திரண்டிருக்கிறார்கள். இந்தி நமக்கு எந்த நமக்கு பயன் தரும். இந்திய கற்றுக்கொள்வது பெரிய விஷயம் இல்லை. நான் அசாமில் இருந்தபோது 03 மாதத்தில் இந்தி கற்றுக்கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர் அங்கு பேசுகையில், மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய். இதில் ஏமாந்தோம் என்றால் பள்ளிகளில் இந்தி, சம்ஸ்கிருத ஆசிரியர்கள் மட்டும் தான் தான் இருப்பார்கள். பள்ளியில் 50 மாணவர்கள் வெவ்வேறு மொழி தேர்ந்தெடுத்தால் எப்படி அதற்கு ஆசிரியர்களை நியமிக்க முடியும். அது நடைமுறை சாத்தியமற்றது. இது ஒரு பிளாக்மெயில் அரசாங்கம்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். ஜென்மத்திற்கும் நீங்கள் செருப்பு அணிய மாட்டீர்கள். செருப்புப் போட வாய்ப்பு அமையாது என கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.