சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனை அடுத்து இந்த ஆட்டம் துபாயில் நடக்கிறது. நாளை போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு நீட்டிக்கும் என்பதால் பாகிஸ்தான் வெற்றிக்காக கடுமையாக போராடும். பாகிஸ்தான் கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாக இருந்தால் இந்திய அணியும் அதே போல கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில் நாளைய போட்டி விளையாடயிருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்று நிகழ்த்த காத்திருக்கிறார். அதாவது இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 298 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 256 இன்னிங்ஸில் களமிறங்கி 13985 ரன்கள் அடித்துள்ளார். இதில் 50 சதம் மற்றும் 23 அரைசதம். இந்த நிலையில் நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் மேலும் 15 நாட்களை அடித்தால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக வேகமாக 14000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனை நிகழ்த்துவார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 14,000 ரன்கள் கடந்து இரண்டு வீரர்களாக சச்சின் மற்றும் சங்கக்காரா மட்டும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.