ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அதில் பல பிளாஷ்பேக்குகள் இருக்கத்தான் செய்யும். முதலில் ஒரு நடிகர் நடிக்க இருந்து பின் வேறொரு நடிகர் நடித்து படம் வெளியாகியிருக்கும். அதுமட்டுமில்லாமல் மொத்தமாக கதையே மாற்றியிருப்பார்கள் என ஒரு படத்திற்கு பின்னாடி நிறைய சம்பவங்கள் நடந்திருக்கும். அப்படித்தால் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய ஒரு படத்திற்கும் நடந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் லிங்குசாமி ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார். நிறைய ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அஞ்சான் திரைப்படம்தான் அவரை பெரிய சறுக்கலுக்கு கொண்டு சென்று விட்டது. அதுவரை அவர் மீதும் அவர் படைப்புகள் மீதும் பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் அஞ்சான் திரைப்படத்திற்காக அவர் செய்த பில்டப் இப்போது வரை யாராலும் மறக்க முடியாது.
அங்கு விழுந்த லிங்குசாமி இன்னும் மீண்டு வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த நிலையில் அவர் இயக்கிய் சூப்பர் ஹிட் அடித்த சண்டக்கோழி படத்தில் முதலில் விஜய்தான் நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் விஜய் நடிக்காமல் போக பின் விஷால் இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார். அதற்காக காரணத்தை லிங்குசாமியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
சண்டக்கோழி ஸ்கிரிப்டை முடித்ததும் இந்த கதையை விஜயிடம் கொண்டு போனேன். முதல் பாதிக் கதையைக் கேட்டதும் போதும் நிறுத்துங்க என்று சொன்னார். நான் முழுசா கேட்டிருங்கன்னு சொன்னேன். ஆனால் விஜய் ராஜ்கிரண் மாதிரி ஒருத்தர் இருக்கும் போது எனக்கு இதுல வேலை எங்கண்ணா இருக்கு என்று கேட்டார். அதன் பிறகு சூர்யாகிட்ட இந்த கதையை கொண்டு போனேன்.
அதுவும் சரி வரல. சரி. நம்ம கிட்ட இருக்கவே இருக்காரு விஷால். நம்மாளு. அவர் இருக்கும் போது ஏன் இந்த கதையை வெளில கொண்டு போகனும்னு நினைச்சுதான் விஷாலை இந்தப் படத்தில் நடிக்க வைத்தேன் என லிங்குசாமி ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். சண்டக்கோழி திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் விஷாலுக்கும் ஒரு பெரிய ஹிட்டை கொடுத்த படம். ஆனால் அதன் இரண்டாம் பாகம் சொல்லும் அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.