தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னை பெண்களும் குழந்தைகளும் அப்பா, அப்பா என்று அழைப்பதாக நெகிழ்ச்சியாக கூறி வருகிறார். எங்கு சென்றாலும் குழந்தைகளும் பெண்களும் தன்னை அப்பா என்று அழைப்பதாக ஸ்டாலின் கூறும் நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அப்பா என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின் தன்னை அப்பா என்று அழைப்பதாக கூறும் நிலையில் எதிர்க்கட்சிகள் அதனை விமர்சித்து வருகிறார்கள். அதாவது எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்ட நிலையில் அவர்கள் அப்பா என்று கதறுவது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா என்று விமர்சித்தார்.
அதன் பிறகு சீமான் ஜெயலலிதாவை அம்மா என அழைத்தது இயற்கையாக அமைந்தது எனவும் மக்கள் தான் அப்பா என்று அழைக்க வேண்டும் எனவும் இப்படி வலுக்கட்டாயமாக நீங்களே உங்களை அப்பா என்று சொல்லக்கூடாது எனவும் விமர்சித்தார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஜெயலலிதா அம்மையாரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் தன்னை அப்பா என்று காப்பி அடிப்பதாக விமர்சித்தார்.
இந்நிலையில்அமைச்சர் வேலு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தமிழகத்தின் தாய்மாமாவாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என்று கூறினார்.அதாவது தமிழ்நாட்டின் தாய் மாமாவாக இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் அத்தனை தாய்மார்களுக்கும் மாத மாதம் ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கிறார் என்று கூறினார். முதல்வர் தன்னை அப்பா என்று அழைப்பதாக கூறும் நிலையில் திமுக அமைச்சரோ அவரை தாய்மாமன் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.