காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க லஞ்சம் வாங்கியதாக அவருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதுள்ளது. அதன்படி பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. 2022மே மாதம் புதிய வழக்கை பதிவு செய்தது.
இதன் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் ஆகியோருக்கு எதிராக சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. தனக்கு எதிராக குற்ற வழக்கு தொடர அனுமதி பெறவில்லை என தெரிவித்து வழக்கு விசாரணைக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி காவேரி பவேஜா முன் நேற்று நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கில் அடுத்த மாதம் மார்ச் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.