தமிழகத்தில் திமுக தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியன் திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக பி. தர்மசெல்வன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பி. தர்மசெல்வன் தொடர்வார் என தெரிவித்துள்ளார்.