தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்படுபவர் நடிகர் அஜீத்குமார். இவருக்கு கார் ரேஸில் ஆர்வம் மிக அதிகம். தொடக்கத்தில் இருந்தே கார் மற்றும் பைக் ரேஸில் பங்கேற்று வந்திருக்கிறார்.அந்த வகையில் கடந்த மாதம் நடைபெற்ற மிச்சலின் 24 ஹெச் துபாய் கார் ரேஸில் கலந்து கொண்ட அஜித் குமார் ரேசிங் குழு சார்பில் கலந்து கொண்டு 3வது இடத்தை பிடித்தார். துபாயில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டின் பேலன்சிய மாகாணத்தில் நடைபெற்ற கார் ரேசில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது.
இந்த போட்டியின் தகுதி சுற்றில் அஜித்குமார் கலந்து கொண்டார். கிளப் டிவிஷன் முதல் ரேஸில் 14வது இடத்தை அவர் பிடித்து அசத்தியிருக்கிறார் இந்நிலையில் நடிகர் அஜித் குமார் சென்ற கார் விபத்தில் சிக்கிய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
பந்தயத்தில் போட்டியாளர் ஒருவரின் கார் வளைவில் திரும்பிய போது நிலைத்தடுமாறியது. இதனால் அக்காரின் பின் வந்த அஜித்தின் கார் விபத்துக்குள்ளாகி ரேஸ் டிராக்கை விட்டு விலகி 2 முறை உருண்டோடியது. விபத்தில் அஜித்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் கார் மோதி இரண்டு மூன்று சுற்று உருண்டு சென்று நின்றது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அஜித்குமாரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. அஜித் காயம் இன்றி உயிர்த்தப்பியது குறித்து அவரது மானேஜர் சுரேஷ் சந்திரா ஏ.கே நலமாக இருப்பதாகவும், அவருக்காக அவர் மீது அக்கறையுடன் பிரார்த்தித்தவர்களுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.