ஆளே இல்லாத கார்... தானாக வந்து வாசலில் கோலம்போட்ட பெண் மீது மோதி பலி!
Dinamaalai February 23, 2025 11:48 PM

  தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்  ராசா. இவர் முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை வீட்டில் தயார் செய்து மாருதி ஈகோ கார் மூலமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்.  


இந்நிலையில் இன்று காலை மகனும், அப்பாவும் வீட்டின் எதிர்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். 17 வயது சிறுவனான ராசாவின் மகன், காரை ஆன் செய்து சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது கார் எதிர்பாராதவிதமாக தானாக இயங்கியதாக கூறப்படுகிறது. 

அவரது வீட்டின் அருகில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த வீட்டு வேலை செய்யும் சரஸ்வதி  என்ற பெண்மணி மீது வேகமாக கார் மோதியது. அத்துடன் அருகில் இருந்த இரு சக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி முட்டி நின்றிருக்கிறது.இதில் காருக்கு அடியில் சரஸ்வதி அம்மாள் சிக்கிக் கொண்டதால் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.  சிறிது நேரத்தில் அந்த காரை நகற்றி சரஸ்வதியை மீட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த  விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.