துயரம்!!! திருத்தந்தை போப் உடல்நிலை கவலைக்கிடம்! வாடிகன் தகவல்...
Seithipunal Tamil February 24, 2025 12:48 AM

ரோம் நாட்டில் போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் 266 வது தலைவரான போப் பிரான்சிஸ், 88 வயதாகும் இவருக்கு வயது முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ளார். மேலும் கடந்த 2022 ல் கடும் முழங்கால் வலி ஏற்பட்டதால் உடனே அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் 2023 ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்.

போப் பிரான்சிஸ் உடல்நிலை:

இந்நிலையில் சில நாட்களாக மூச்சு திணறல் பாதிப்பு அதிகரித்துள்ளதால் கடந்த 14ஆம் தேதி அன்று ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து,வாடிகன் நிர்வாகம் போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது," போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர் குணமடைய கத்தோலிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி வேண்டிக் கொள்கிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிகன் மக்கள்:

மேலும் போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து அவரின் நல விரும்பிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த அறிக்கையை கேட்டு வாடிகன் மக்கள் போப் பிரான்சிஸ் குணமடைய கடவுளிடம் வேண்டிக் கொண்டு அவ்வப்போது பிரார்த்தனை செய்துகொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.