“ஒடிசி நடனத்தின் தந்தை”… பத்மஸ்ரீ மயாதார் ராவுத் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்…!!
SeithiSolai Tamil February 24, 2025 02:48 AM

இந்தியாவின் மிகச் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவர் மயாதார் ராவுத். இவருக்கு 92 வயது ஆகும் நிலையில் வயது மூப்பின் காரணமாக டெல்லியில் காலமானார். ஒடிசா மாநிலத்தில் பிறந்த இவர் புறக்கணிக்கப்பட்ட ஒடிசி நடனத்தை மீட்டெடுத்து அதற்கு புதிய வடிவம் கொடுத்து இன்று கிளாசிக்கல் நடனங்களில் ஒன்றாக ஒடிசி திகழ்வதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறார்.

இதன் காரணமாக அவரை ஒடிசி நடனத்தின் தந்தை என்று அழைக்கிறார்கள். இவர் பத்மஸ்ரீ மற்றும் சங்கீத நாடக அகாடமி விருதுகள் போன்றவற்றைப் பெற்றுள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.