நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்
Top Tamil News February 25, 2025 03:48 PM

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உயர்ந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜகவிற்கு அடுத்தபடியாக தமிழக்த்தில் வாங்கு வங்கியை கொண்ட அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் தலைவர் சீமான் பெரியார் குறித்து பேசிய சர்ச்சை கருத்துகளுக்கு பிறகு நிர்வாகிகள் விலகல் அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.  நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் நேற்று கட்சியில் இருந்து விலகினார். 

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  கட்சியை சீமான் வீழ்ச்சி பாதையில் கொண்டு செல்வதாக பாவேந்தன் குற்றச்சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் இன்று செல்லும் நிலையில் பாவேந்தன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த 2019ல் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியிலும், 2021ல் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியிலும் நா.த.க. சார்பில் பாவேந்தன் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடதக்கது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.