கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென தங்கம் விலை குறைந்துள்ளதாகவும் இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 8,050 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 200 குறைந்து ரூபாய் 64,4 00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,781எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,248 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 106.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 106,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva