தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 26) மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.
`பிறப்பால் ஒரு தலைவன் உருவாக்கப்படக்கூடாது'இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், த.வெ.க தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவ்விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தின் முகமான நம் தலைவருக்கு வணக்கம். பிறப்பால் ஒரு தலைவன் உருவாக்கப்படக்கூடாது.
மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்கிற உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தப்போது பல்வேறு அழைப்புகள் வந்தது. உங்கள் கொள்கைகளை தமிழக வெற்றி கழகத்தில் இருந்து தொடங்குங்கள் என்று தலைவர் விஜய் சொன்னார். நான் ஏன் தவெக-வில் சேர்ந்தேன் என்றால், சிறு வயதில் புரட்சியாளர் அம்பேத்கரிடமும், தந்தை பெரியாரிடமும் இணைக்கப்பட்டவன் நான்.
அந்தக் கொள்கை வழியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் பணி செய்த அனுபவம் இருக்கிறது. ஆனால் என்னுடைய ஒரே கேள்வி தந்தை பெரியாரின் சமூக சீர்த்திருத்தத்தைப் பேசக்கூடிய 70 வருட அரசியல் எப்போதும் புரட்சியாளர் அம்பேத்கரை மேடையில் ஏற்றியது கிடையாது. இரு பெரும் தலைவர்கள் அது ஆண், பெண் என்ற பாகுப்பாடு இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் எந்த ஆளுமையை தமிழகத்தின் தன்னுடைய தியாகத்தை செய்தவர்களை கொள்கைத் தலைவர்களாக நியமிததுள்ளார். தன்னுடைய சினிமா என்கிற உச்சபட்ச பொருள் ஈட்டக்கூடிய ஒரு பொறுப்பையும் துறந்து இந்தக் கொள்கை வழியில் நடக்க வேண்டும்,
ஒரு புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அவருடன் பேசும்போதுதான் அவர் எந்த அளவிற்கு கொள்கை ரீதியில் உள்வாங்கி இருக்கிறார் என்கிற ஒரு புரிதல் எனக்கு இருந்தது. அதனை ஏற்று தவெகவில் இணைத்துக் கொண்டேன்...” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " தலைவர் கூறியதைப் போல பெரியாரிஸம் பேசுவார்கள். ஆனால் சாதி அரசியலைப் பேசி தேர்தலில் வெற்றிப் பெற்று ஊழலை முதற்கண்ணாக கொண்டு செயல்படும் போலிக் கபடவாதிகள் இங்கு இருக்கிறார்கள். பெரியாரையும் அவரின் சித்தாந்தத்தையும் பேசி இன்றைய அரசியல் ஒரு போலிக் கபட வாதிகளின் கையில், ஊழல்வாதிகளின் கையில் இருந்துக் கொண்டிருக்கிறது. அதைத் துடைத்தெரிய வேண்டும். மக்களிடம் உணர்வற்ற தலைவர்கள்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த உணர்வு தவெக-வில் இருக்கிறது.
ஒரே கட்சி பெரியாரையும், அம்பேத்கரையும் இணைத்து சமூக சீர்த்திருத்தத்தை உருவாக்கி பரிணமித்து வருகிறது. பெரியார், அண்ணா கண்ட கனவுகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வெற்றிப் பெற்று ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்து மிகப் பெரிய கல்வி நிறுவனங்களை நடத்திக்கொண்டு சினிமாத் துறையில் பல்வேறு தொழில்களை நடத்திக் கொண்டு இருக்கிற ஒரு அரசாங்கமாக இருக்கிறது. அதற்கு ஒரே மாற்று தமிழக வெற்றிக் கழகம்.
75 வருடங்களாக கொள்கை பேசியத் தலைவர்கள் இதுவரை எண்ண மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 2021-ல் திமுக தேர்தல் பிரச்சாரம் செய்தப்போது தமிழகத்தை கடனில் அதிமுக விட்டுச் சென்றிருக்கிறது என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த நான்கு வருடத்தில் 4 லட்சம் கோடி கடன் இருக்கிறது. மேடைகளில் பேசி மக்களிடம் கவர்ச்சியை ஏற்படுத்தி ஆட்சியை பிடித்து அதன் மூலம் ஊழலை மட்டுமே செய்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் இன்று ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது. கடனை உருவாக்கி ஊழல் செய்துக் கொண்டிருக்கிறார்கள்
ஏளனம் பேசுவதை நிப்பாட்டுங்கள். ஒருமையில் பேசுவதை நிப்பாட்டுங்கள். உங்களுயை கூட்டணி உடையும். இது மன்னராட்சி கிடையாது. நம்முடைய பயணத்தை உருவாக்குவோம். வாய்ப்புக் கொடுத்த தலைவருக்கு நன்றி. வெற்றி நிச்சயம். தலைவர் என்ற பரிணாமத்தை நோக்கி செல்கிறார். தளபதி விரைவில் தலைவராவார்." என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...