தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரசாந்த் கிஷோருக்கும் வெற்றிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. உங்கள் உழைப்பே வெற்றியைத் தரும். தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் இருக்கிறார். தமிழ்நாடு பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. கண்டிப்பாக விஜய் வெற்றி பெறுவார்.
என்னை விட தமிழ்நாட்டில் பிரபலமாக இருப்பவர் பீகாரைச் சேர்ந்த தோனி தான். தமிழக வெற்றி கழகத்தை தமிழ்நாட்டில் வெற்றி பெற வைக்கும் போது நான் தோனியை விட பிரபலமாவேன் என்று கூறினார். மேலும் குஜராத் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தேசிய அளவில் பிரபலமாக்கியதோடு பாஜகவை ஆட்சியில் அமர்த்தியதற்கும் கடந்த தேர்தலில் திமுகவில் வெற்றிக்கும் பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.