கேதார்நாத் கோவில் நடை திறப்பது எப்போது? முன்பதிவு தேதி அறிவிப்பு..!
WEBDUNIA TAMIL February 26, 2025 11:48 PM

கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படும் தேதி மற்றும் முன்பதிவு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இமயமலை தொடரில் உள்ள கேதார்நாத் கோவில், குளிர்காலங்களை தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும் நிலையில், வரும் மே மாதம் 2ஆம் தேதி காலை 7 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என்று கோவில் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்துமதத்தின் மிக முக்கிய யாத்திரைகளில் ஒன்றான கேதார்நாத் யாத்திரை, 4 வகையான புனித தலங்களை தரிசனம் செய்யும் வகையிலும் பயணம் செய்யலாம். இந்த புனித தலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்த யாத்திரை செல்வதற்கு பக்தர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், நடப்பு ஆண்டு கேதார்நாத் யாத்திரைக்காக மார்ச் 2ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மே மாதம் 2ஆம் தேதி கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, முன்பதிவு செய்ய ஏராளமான பக்தர்கள் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.