FLASH: அரசியலில் மட்டும் நிரந்தர நண்பனோ, நிரந்தர எதிரியோ கிடையாது…. எப்படி க்ளோஸ் பண்ணலாம்ன்னு கன்ப்யூஷன் வரும்… தவெக தலைவர் விஜய் அதிரடி….!!
SeithiSolai Tamil February 27, 2025 12:48 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினரான பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்து பேச ஆரம்பித்தார். என் நெஞ்சில் குடியிருக்கும் என பேச ஆரம்பித்தபோது அரங்கம் அதிர்ந்தது. இதனையடுத்து விஜய் கூறியதாவது, அரசியல் என்றாலே வேற லெவல் தான். இதில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை பார்க்கலாம். யார் யாரை எதிர்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என கணிக்கவே முடியாது. இந்த அரசியலில் மட்டும் நிரந்தர நண்பனோ நிரந்தர எதிரியோ இல்லன்னு சொல்லுவாங்க. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை.

ஆனால் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒருவர் அரசியலுக்கு வந்தால் நல்ல முறையில் வரவேற்பார்கள். நம் கட்சி வளர்ந்தால் ஒரு சில பேருக்கு எரிச்சல் வரத்தானே செய்யும். இதுவரைக்கும் நாம சொன்ன பொய் எல்லாம் நம்பிட்டு ஓட்டு போட்டுட்டு இருந்தாங்களே. இவன் வேற மக்களுக்கு நெருக்கமாகிட்டு இருக்கான். இவனை எப்படி க்ளோஸ் பண்ணலாம் என்று கன்ப்யூஷன் வரத்தான் செய்யும். அதனால் என்ன பண்ணுவது என தெரியாமல் வரவன் போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிப்பான் என்று சொல்லி பேச ஆரம்பிப்பார்கள். இப்படிப்பட்ட அரசியல் களத்தில் பயமின்றி நமக்கு வரும் எதிர்ப்புகளை எல்லாம் லெப்ட் ஹேண்டில் டீல் பண்ணிட்டு இரண்டாம் ஆண்டில் தமிழக வெற்றி கழகம் அடியெடுத்து வைத்துள்ளது என கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.