தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னை மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்டில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் கண்டிப்பாக வரலாறு படைக்கும்.
கடந்த 1967-ம் ஆண்டு 1977 ஆம் ஆண்டு போன்று கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டிலும் மாற்றம் வரும். அரசியல் என்றாலே வேற லெவல் தான்.அப்படி இருக்கும்போது ஒரு சிலருக்கு பிடிக்காதவர்கள் அரசியலுக்கு வந்தால் எரிச்சல் வரும். நம் கட்சி ஏழை எளிய மக்களுக்கான கட்சி பண்ணையார்கள் கட்சி கிடையாது என்று கூறினார்.