ஆந்திராவில் மகாசிவராத்திரிக்கு ஆற்றில் குளிக்க சென்று இருவேறு இடத்தில் தந்தை மகன் உள்பட 7 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடிபுடி கிராமத்தை சேர்ந்த 11 இளைஞர்கள் மகாசிவராத்திரி என்பதால் அங்குள்ள கோதவரி ஆற்றில் குளிக்க அனைவரும் மணல் திட்டுகளில் நடந்து சென்று கோதாவரியில் குளித்தனர். அப்போது ஆற்றில் ஒரு இடத்தில் இருந்த மணல் குழியில் அனைவரும் சிக்கிக்கொண்டனர். இருப்பினும் 11 பேரில் ஆறு பேர் நீந்தி உயிர் தப்பினர். ஐந்து பேர் காணாமல் போயினர். உடனடியாக தப்பி வெளியேறிய இளைஞர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருமலை ஷெட்டி பவன் (20) பாதாள துர்கா பிரசாத் (19) அனிசெட்டி பவன் (19) காரே ஆகாஷ் (19) படால சாய் (19) ஆகிய ஐந்து இளைஞர்களையும் சடலமாக மீட்டனர். அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதேபோன்று ஆந்திராவின் என்டிஆர் மாவட்டத்தின் பெனுகன்சிப்ரோல் மண்டலத்தில் உள்ள கொல்லிகுல்லா கிராமத்தைச் சேர்ந்த 25 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒரு பேருந்தில் ஏறி ஸ்ரீசைலம் புறப்பட்டனர். ஸ்ரீசைலத்திற்கு சிவன் கோயிலில் மகா சிவராத்திரியில் புனிய நீராட ஸ்ரீசைலம் மலைக்குக் கீழே கிருஷ்ணா நதிக்கரையில் புனித நீராடினர். புனித நீராடும்போது பெருகு குரவையாவின் (40) மகன் 8 வயது கால் தவறி ஆற்றில் விழுந்தார். குளித்துக் கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்த மகனைப் பிடிக்க முயன்றபோது, குரவையாவும் வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி இருவரும் இறந்தார். பின்னர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.