எலான் மஸ்க் காலுக்கு முத்தமிடும் டிரம்ப்..!
Newstm Tamil February 26, 2025 08:48 PM

அமெரிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை (HUD) அலுவலகங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எலான் மஸ்க்-இன் கால்களை முத்தமிடும் வீடியோ ஒளிபரப்பானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ, ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டு “உண்மையான ராஜா வாழ்க” என்ற வாசகம் கொண்டுள்ளது.

இந்த வீடியோவை யார் உருவாக்கியுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. மேலும், அரசு அலுவலக தொலைக்காட்சியில் இந்த வீடியோ எவ்வாறு ஒளிபரப்பானது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிலர் இணைய சேவைகள் ஹேக் செய்யப்பட்டு இந்த வீடியோ ஒளிபரப்பானதாகக் கூறுகின்றனர். வெறும் எட்டு நொடிகள் மட்டுமே நீடிக்கும் இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி விட்டது.

இந்த விவகாரம்குறித்து கருத்து தெரிவித்த HUD துறை செய்தித் தொடர்பாளர் கேசி லொவெட், “வரி செலுத்துவோர் பணம் மற்றும் நேரம் வீணாகிறது” எனக் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.