உலர் அத்திப்பழம் சூப்பர் ஃபுட்....எப்படின்னு தெரியுமா ?
GH News February 26, 2025 10:11 PM

அத்திப்பழம் (Dry Fig), பண்டைய மருத்துவ முறைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது. இது அதிக நார்ச்சத்து, வைட்டமின், மினரல்கள் நிறைந்த சூப்பர் ஃபூட் ஆகும். ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் போன்றவை அத்திப்பழத்தை ஒரு இயற்கை மருந்தாக பரிந்துரைக்கின்றன. அத்திப்பழம் சாப்பிடுவதால் செரிமானம், இதய ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, ரத்த ஓட்டம் ஆகியவை அதிகரிக்கும்.

அத்திப்பழத்தின் முக்கிய மருத்துவ பயன்கள் :

1. மலச்சிக்கலை போக்கும் இயற்கை நிவாரணம் :

அத்திப்பழத்தில் நார்சத்து அதிகமாக இருப்பதால், இது குடல் இயக்கத்தை அதிகரித்து மலச்சிக்கலை நீக்கும். தினமும் 2-3 அத்திப்பழங்களை இரவு வெந்நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால், குடல் இயக்கம் சீராக இருக்கும். வயிற்றுப் போக்கு மற்றும் செரிமான கோளாறுகளுக்கு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படும்.

2. இதய ஆரோக்கியம் :

இதய நோய்களுக்கான இயற்கை பாதுகாப்பு அத்திப்பழம். இது கெட்ட கொழுப்பை (Bad Cholesterol - LDL) குறைத்து, நல்ல கொழுப்பை (Good Cholesterol - HDL) அதிகரிக்கிறது. அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு அடைப்புகளை குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பொதுவாக, இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க, தினமும் 2-3 அத்திப்பழம் சாப்பிடலாம்.

3. எலும்புகளுக்கு வலிமை :

அத்திப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், மாங்கனீஸ், மாக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இவை எலும்புகளை வலுப்படுத்தி, ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகின்றன.  வயது முதிர்ந்தவர்களுக்கு எலும்பு உறுதியடைய தினமும் 2-3 அத்திப்பழம் சாப்பிடலாம். ஆஸ்டியோபரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு குறைபாடுகளைத் தடுக்கும்.

4. இரத்தத்தை சுத்தமாக்கும் :

medicinal benefits of consuming dry fig

அத்திப்பழத்தில் அதிக அளவில் இரும்புசத்து  இருப்பதால், இது ஹீமோகுளோபின் அளவைக் கூட்டும். ரத்தசோகை (Anemia) பாதித்தவர்களுக்கு இது சிறந்த உணவாகும். இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் பைட்டோநியூட்ரியன்ஸ் (Phytonutrients) அத்திப்பழத்தில் அதிகமாக உள்ளது. இரத்தசோகை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் 2-3 ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடலாம்.

5. மூளை செயல்பாட்டை அதிகரிக்கும் :

நினைவாற்றல் மற்றும் மனச்சோர்வை ஆகியவற்றை குறைக்க, அத்திப்பழம் ஒரு சிறந்த உணவாக செயல்படுகிறது. அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், மூளைக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. மாணவர்கள் மற்றும் வேலை பளு அதிகமானவர்கள், தினமும் ஒரு கைப்பிடி அத்திப்பழம் சாப்பிட்டால், மூளை சக்தி அதிகரிக்கும்.

6. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்:

அத்திப்பழத்தில் இருக்கும் Cellulose மற்றும் பிட்டோ நியூட்ரியன்ஸ், இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது. இது ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும். இனிப்பு பிடிக்காத diabetic நோயாளிகள், அத்திப்பழத்தை ஒரு சிறந்த ஸ்நாக் ஆக எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் 1-2 அத்திப்பழத்தை மிதமான அளவில் சாப்பிடலாம்.

7. பாலியல் ஆரோக்கியம் : 

பண்டைய காலங்களிலிருந்தே அத்திப்பழம் இயற்கையான ஆப்ரோடிஸியாக (Aphrodisiac) உணவாக கருதப்படுகிறது. ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மன அழுத்தத்தை குறைத்து, உற்சாகம் தரும். கணவன் – மனைவி உறவை உறுதிப்படுத்த, இரவில் 2-3 அத்திப்பழம் வெந்நீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

அத்திப்பழத்தை உணவில் சேர்க்கும் முறை :

1️. நேரடியாக – தினமும் 2-3 அத்திப்பழம் உணவாகச் சேர்க்கலாம்.
2️. பால் மற்றும் தேனுடன் – 2-3 அத்திப்பழங்களை கால் கப் பாலில் ஊறவைத்து, தேனுடன் சாப்பிடலாம்.
3️. நைட் ஸ்நாக் – வெறும் வயிற்றில் பசிக்கும் போது சாப்பிடலாம்.
4️. கூழ் அல்லது Smoothie – பாதாம், முந்திரி, பன்னீர் சேர்த்து ஒரு  பேஸ்ட் அல்லது ஜாம் போல் ஆக்கி சாப்பிடலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.