தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் உள்ள ஒரு பகுதியில் இன்று காலை இரட்டை மாடிக் கொண்ட பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. பஸ் மலையிலிருந்து கீழே உருண்டு விழுந்த நிலையில் 18 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 31 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.