தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தலைவர் விஜய் கூறியதாவது, புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பி விடுகிறார்கள். மும்மொழி கொள்கை என்று. இதை இங்கு செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்க மாட்டார்களாம். இதை பார்த்தால் எல்கேஜி பசங்க சண்டை போட்டுக்குற மாதிரி இருக்கு. எந்த பாசிசமும் பாயாசமும்.. அதாங்க நம்ம அரசியல் எனிமியும், கொள்கை எனிமியும் பேசி வைத்துக்கொண்டு மாற்றி மாற்றி சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிற மாதிரி அடித்துக் கொள்வார்களாம். அதை மக்கள் நம்ப வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் மும்மொழி கொள்கையில் திமுகவும் பாஜகவும் நாடகமாடுவதாக விஜய் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, இதன் வீரியம் தெரியாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.