தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு தொகுதி மறு வரையறை செய்தால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார். இதற்காக மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மொத்தம் 45 கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கானா பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.டி ராமாராவ் கூறியதாவது, தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கையை பொறுப்புணர்வோடு செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களை தண்டிக்கும் வகையில் ஒன்றிய அரசு நடந்து கொள்ளக் கூடாது என கூறியுள்ளார்.